இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி விலக்கு: ரஷ்யா வரவேற்பு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:46 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, அணு எரிபொருள் வணிகக் குழு (என்.எஸ்.ஜி) சார்பில் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் ரஷ்யா தீர்க்கமாக இருந்ததாகவும், இந்த விலக்கு கிடைத்துள்ளது இந்தியாவின் தீவிர அணு ஆயுதப் பரவ‌ல் தடு‌ப்பு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் மூலம் உலக நாடுகள் இந்தியாவுடன் அமைதியான முறையில் அணு சக்தி தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்