பிரதமர் மன்மோகன்சிங் புதுடெல்லி திரும்பினார்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (11:44 IST)
கொழும்பில் நடந்த சார்கமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், நேற்று புதுடெல்லி திரும்பினார். ‌சி‌றில‌ங்கா பிரதமர் விக்ரமநாயகே விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.

சி‌றில‌ங்கா தலைநகர் கொழும்பில் கடந்த 2, 3ஆம் தேதிகளில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்கச் கடந்த 1ஆம் தேதி ‌சி‌றில‌‌ங்கா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய தினம் மாலையே அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன், மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சு நடத்தினார்.

பின்னர் 2ஆம் தேதி துவங்கிய சார்க் மாநாட்டில் உரையாற்றிய மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம், இந்திய-பா‌கி‌ஸ்தா‌ன் எல்லையில் அத்துமீறிய துப்பாக்கிச்சூடு, இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பங்கு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினார்.

இதையடுத்து நேற்று நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்த மன்மோகன்சிங், இருதரப்பு உறவுகள், நேபாளத்தில் அமைய உள்ள புதிய ஆட்சி மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் மாலத்தீவு அதிபர் மம்மூன் அப்துல் கையூம், மன்மோகன்சிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

சார்க் மாநாடு நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதுடெல்லி திரும்புவதற்காக கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற மன்மோகன்சிங்கை, ‌சி‌றில‌ங்கா பிரதமர் விக்ரமநாயகே வழியனுப்பி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்