பாகிஸ்தானின் புதிய கூட்டணி ஆட்சியின் அமைச்சரவையில் இருந்த நவாஸ் ஷெரீஃப் கட்சியின் அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை இன்று பிரதமர் யூசுஃப் ரஸாவிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இன்று நடந்த பரபரப்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை பி.எம்.எல்-என் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப் இதனை தெரிவித்தார்.
முஷாரஃப் ஆட்சிக் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் நியமிப்பது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுதிமொழியை காப்பாற்றத் தவறிவிட்டதால் அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை எட்டியதாக நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டணியில் தன் கட்சி நீடிக்கும் என்று கூறியுள்ள நவாஸ் ஷெரீஃப் அரசியல் விவகாரங்கள் அடிப்படையில் ஆதரவு அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மார்ச் 31ஆம் தேதி பதவியேற்ற 24 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையில் நவாஸ் ஷெரீஃப் கட்சியைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.