பருவநிலை மாற்றம்: வறுமை ஒழிப்பு இலக்குகள் பாதிக்கும்!

சனி, 3 மே 2008 (13:43 IST)
வறுமை ஒழிப்பு புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள் பருவநிலை மாற்றங்களால் பதிக்கப்படும் என்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமுதாயக் குழு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வளர்ச்சி இலக்குகளுக்கும் பருவநிலை மாற்றங்களுக்கும் இடையேயான உறவு முறைகள் குறித்து நடந்த விவாதத்தில் ஐ.நா. பொருளாதார மற்றும் சமுதாயக் குழு தலைவர் லோ மிரார்ஸ் பேசுகையில், பல நாடுகள் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளிலிருந்து விலகியுள்ளன, மேலும் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களாலவறுமை ஒழிப்பு முயற்சிகளும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதாவது நாடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், புத்தாயிரமாண்டு ஐ.நா. இலட்சியங்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுவது குறித்து உயர் மட்ட விவாதம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம், வளர்ச்சி என்பதற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும், ஏனெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், நாடுகளின் பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சியையும் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமுதாயக் குழுவின் தலைமை செயலர் ஷா ஸுகாங் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்