திலி: கிழக்கு தைமூரின் தலை நகரமான திலிக்கு அருகே கடலுக்கு அடியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சமைடந்த வீடுகளை வீட்டு மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்.
திலிக்கு 88 கிமீ வடக்கே, கடலுக்கு அடியில் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவலின் படி ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளிகள் என்று பதிவாகியுள்ளது.
ஆனால் இந்தோனேஷிய வானிலை ஆய்வு மையமும் புவிபௌதீக கழகமும் ரிக்டர் அளவு கோலில் 6.4 என்று பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய உடனடித் தகவல்கள் இல்லை.