நேபாள நாடாளும‌ன்ற‌த் தேர்தல் துவங்கியது!

காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து நடை‌பெற்ற மன்னாராட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் பல ஆண்டுகளாக மன்னர் ஞானேந்திராவின் ஆட்சி நடைபெற்றது, மன்னராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தேர்தலில் மன்னர் ஞானேந்திரா சார்பாக பலர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அவர் வெற்றி ‌பெற்றால் அவர் ஆட்சி அமைக்க முடியும், இதற்காக அவர் முழு முனைப்புடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

தேர்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேபாள தேர்தல‌ை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்