பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 23 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கைது!

செவ்வாய், 18 மார்ச் 2008 (20:08 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்ததாக 23 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்களை அ‌ந்நா‌ட்டு‌க் கட‌ற்படை‌யின‌ர் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து‌ள்ளன‌ர்.

இது கு‌‌றி‌த்து‌ப் பா‌கி‌ஸ்தா‌ன் கட‌ற்படை அ‌திகா‌ரிக‌ளிட‌ம் கே‌ட்டத‌ற்கு, "இ‌ந்‌திய ‌மீன‌வ‌ர்க‌ள் கரா‌ச்‌சி துறைமுக‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் அ‌த்து‌மீ‌‌றி நுழை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து 5 ‌மீ‌ன்‌பிடி படகுக‌ள் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன" எ‌ன்றன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், அ‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் குஜரா‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்களாக இரு‌க்கலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்