லாகூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க் கிழமை காலை லாகூர் நகரில் உள்ள புலனாய்வுத்துறை விசாரணை அலுவலகம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் அசிஃப் ஜர்தாரி வீட்டினருகில் நடந்த குண்டு வெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் புலனாய்வுத்துறை விசாரணை அலுவலகத்தில் லாரியில் வெடிபொருட்களுடன் நுழைந்த தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவன், கதவை உடைத்துக் கொண்டு காவலர் ஒருவர் மேல் லாரியை ஏற்றிவிட்டு லாரியை மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தது காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் புலனாய்வுத்துறை ஊழியர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.