லாகூரில் நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லாகூரில் உள்ள பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அலுவலகம், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி வீட்டிற்கு அருகில் உள்ள விளம்பர நிறுவனம் ஆகிய இரண்டு இடங்களில் நேற்று காலை அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தீவிரவாத சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அதிர்ச்சியும், கவலையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இறங்கலையும் தெரிவித்துள்ளார்.
'இந்த நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனினும் அரசும், பொதுமக்களும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக செயல்படுவது வரவேற்கத்தக்கது' என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.