ஹின்ட்ராஃப் பேரணி மீது கண்ணீர் புகை வீச்சு!60 பேர் கைது!
சனி, 16 பிப்ரவரி 2008 (19:30 IST)
மலாய் இனத்தவருக்கு நிகரான உரிமைகளும், வாய்ப்புகளும் தங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று கோரி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹின்ட்ராஃப் நடத்திய பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை சுட்டும், ரசாயணம் கலந்த தண்ணீரையும் அடித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
ஹின்ட்ராஃப் நடத்தியது சட்டத்திற்குப் புறம்பான பேரணி என்றும், அதில் கலந்து கொள்ள வந்த 20 பேரை கைது செய்துள்ளதாகவும் மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹின்ட்ராஃப் உறுப்பினரும், வழக்கறிஞருமான சுரேந்திரன் கூறியுள்ளார்.
ஹின்ட்ராஃப் தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவியின் தலைமையில் நடைபெற அனுமதி கோரப்பட்டிருந்த இந்த பேரணி, மலேசிய பிரதமர் அப்துல்லா பதாவியைச் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்திருந்தது.