ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இறுதி ஊர்வலம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத் அருகே உள்ள அஜாஜ் என்ற கிராமத்தில் நேற்று அல் கய்டா பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சலாஹுதீன் மாகாண துணை ஆளுனர் அகமத் அப்துல்லாவை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதாம் உசேனின் மனைவி சஜிதா கைரல்லா துல்பாவின் முன்னாள் பாதுகாவலரான அந்தர் முகமது அபேத் என்பவரின் இறுதிச் சடங்கின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
அபேதின் மகன் மற்றும் பேரன் ஆகியோரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். எனினும் இத்தாக்குதலில் துணை ஆளுனர் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.