தற்கொலைத் தாக்குதலில் பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டார்!

Webdunia

வியாழன், 27 டிசம்பர் 2007 (19:09 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கலந்துகொண்ட கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமுற்று உயிரிழந்தார்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத்திற்கு அருகில் உள்ள ராவல்பிண்டியில் இன்று மாலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ஊர்வலமும், அதன்பிறகு லியாகத் பாக் என்ற இடத்தில் பொதுக் கூட்டமும் நடந்தது. இதில் பெனாசிர் புட்டோ புட்டோ பேசி முடித்துவிட்டு வெளியேறிய போது அங்கிருந்த வாயில் பகுதியில் திடீரென்று குண்டு வெடித்தது. இதில் பெனாசிர் புட்டோ படுகாயமுற்றார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.

பெனாசிரை குறிவைத்து நடந்த இத்தாக்குதலில் அந்த இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமுற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்