ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் மத சுத‌ந்‌திர‌ம் கா‌க்க‌ப்படு‌ம்: ‌சீனா உறு‌தி!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (18:30 IST)
ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டிகளை‌க் கா‌ண்பத‌ற்காக வருகைதரு‌ம் அய‌ல்நா‌ட்டு‌ர‌சிக‌ர்க‌ளி‌ன் மத சுத‌ந்‌திர‌‌த்‌தி‌ற்கு உ‌ரிய ம‌ரியாதை வழ‌ங்கப்படு‌ம் எ‌ன்று ‌சீனா உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

அடு‌த்த ஆ‌ண்டு ‌சீன தலைநக‌ர் பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல் நடைபெறவு‌ள்ள ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டிக‌ளை‌க் கா‌ண்பத‌ற்காக உலகெ‌ங்கு‌ம் இரு‌ந்து ல‌‌ட்ச‌க்கண‌க்கான ர‌சிக‌ர்க‌ள் கு‌விவா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ‌'ஒ‌லி‌ம்‌பி‌க்கை ‌விரு‌‌ம்பு‌ம் ‌கி‌றி‌ஸ்தவ ர‌சிக‌ர்க‌ள் த‌ங்களுட‌ன் பை‌பி‌ள் எடு‌த்துவர தடை‌வி‌தி‌க்‌க‌ப்படு‌ம்' எ‌ன்று க‌த்தோ‌‌லி‌க்க‌‌ ‌நிறுவன‌ம் ஒ‌ன்று செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டிரு‌ந்தது.

இ‌ச்‌செ‌ய்‌தியை ‌சீன அரசு வ‌ன்மையாக‌க் க‌ண்டி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌க் கரு‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்த ‌சீன அயலுறவு அமை‌ச்சக‌ச் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் ‌லியூ ‌ஜியா‌ன்சா, ''என‌க்கு‌த் தெ‌ரி‌ந்து ‌சீன அர‌சி‌ன் மத‌விவகார‌ங்க‌ள் அமை‌ச்சக அ‌திகா‌ரிகளோ, பெ‌ய்‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க் அமை‌ப்பாள‌ர்களோ இதை‌ப் போ‌ன்ற க‌ட்டு‌ப்பாடுக‌ள் எதை‌யு‌ம் ‌வி‌தி‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். இ‌ந்த‌ச் செ‌ய்‌தி வெறு‌ம் புர‌ளி'' எ‌ன்றா‌ர்.

''‌சீன அர‌சி‌ன் ச‌ட்ட‌ப்படி, அய‌ல் நா‌ட்டவ‌ர்க‌ள் மத‌‌ம் சா‌ர்‌ந்த கு‌றியீடுக‌ள், பு‌த்தக‌ங்க‌ள், ‌வீடியோ பட‌ங்க‌ள், ஒ‌‌லி‌ப் பேழைக‌ள் ஆ‌கியவ‌ற்றை த‌ங்க‌ளி‌ன் சொ‌ந்த‌ப் பய‌ன்பா‌ட்டி‌ற்காக எடு‌த்துவர எ‌ந்த‌த் தடையு‌ம் ‌இ‌ல்லை.

சீன குடிம‌க்க‌ளி‌ன் மத சுத‌ந்‌திர‌உ‌ரிமைகளை‌ப் பாதுகா‌ப்பத‌ற்கு‌த் தேவையான ச‌ட்ட‌ங்க‌ள் அர‌சியலமை‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌த்‌திலேயே கொடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன. இவை ‌சீனா‌வி‌ல் வ‌சி‌க்கு‌ம் அய‌ல் நா‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

ஒ‌‌லி‌ம்‌பி‌க் நடைபெறு‌ம் பகு‌திக‌ளி‌ல் மத சேவை மைய‌ங்க‌ள் தொட‌ங்க‌ப்படு‌ம். போ‌ட்டிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் ‌வீர‌ர்க‌ளி‌ன் வச‌தி‌க்காக பு‌த்த‌ம், ஹி‌ந்து, யூத‌ம், இ‌ஸ்லா‌ம், க‌த்தோ‌லி‌க், கிறித்தவ மத‌ங்களை‌ச் சே‌ர்‌ந்த வ‌ழிபா‌ட்டு மைய‌ங்க‌ள் அமை‌க்க‌ப்படு‌ம்'' எ‌ன்றா‌ர் லியூ ‌ஜியா‌ன்சா.

''க‌த்தோ‌லி‌க்க‌ர்களு‌க்காக த‌ற்கா‌லிக தேவாலய‌ம் ஒ‌ன்று‌ம் க‌ட்ட‌ப்படு‌ம். அது த‌விர பெ‌ய்‌ஜி‌ங்கி‌ல் உ‌ள்ள எ‌ல்லா ‌கி‌றி‌ஸ்தவ தேவாலய‌ங்களு‌ம் க‌த்தோ‌லி‌க்க‌ர்க‌ளி‌ன் வருகை‌க்காக ‌திற‌ந்து வை‌க்க‌ப்படு‌ம்'' எ‌ன்று ‌சீன க‌த்தோ‌லி‌க்க கூ‌ட்டமை‌‌ப்‌பி‌ன் துணை‌த் தலைவ‌‌ர் ‌லியூ ப‌னிய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சீனா‌வி‌ல் இதுவரை ப‌ல்வேறு மொ‌ழிக‌ளி‌ல் 42 ‌மி‌ல்‌லிய‌ன் பை‌பி‌ள் ‌பிர‌திக‌ள் அ‌ச்‌சிட‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்