ஈரா‌க் ‌கு‌ண்டு வெடி‌ப்பில் 25 பே‌ர் ப‌லி!

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (17:01 IST)
ஈரா‌க்‌கி‌‌ல் நடந்த த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் காவல் துறையினர் உட்பட 25 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

ஈரா‌க்‌கி‌ல் பத‌ற்றமான பகு‌திக‌ளி‌ல் ஒ‌‌ன்று ப‌க்குபா. இ‌ந்நக‌ரி‌ல் உ‌ள்ள காவ‌ல்துறை‌த் தலைமை அலுவலக‌‌ம் அரு‌கி‌ல் இ‌ன்று சை‌க்‌கி‌ளி‌ல் வ‌ந்த த‌ற்கொலை‌ப்படை‌ பய‌ங்கரவா‌தி தா‌ன் வை‌த்‌திரு‌ந்த வெடி‌கு‌ண்டை வெடி‌க்க‌ச் செ‌ய்தா‌ன்.

இ‌தி‌ல் 25 பே‌‌ர் ப‌‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 20 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ப‌க்குபா பொது மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ன்று உயர‌திகா‌ரி குதய‌ர் அ‌ல் ‌தி‌மி‌‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, ஈரா‌க், அமெ‌ரி‌க்க ராணுவ‌த்‌தின‌ர் இணை‌ந்து வ‌ன்முறையாள‌ர்களு‌க்கு எ‌திராக கடுமையான தா‌க்குத‌ல்களை ப‌க்குபா நக‌ரி‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

கு‌றி‌ப்பாக ஈரா‌க்‌கி‌‌ல் உ‌ள்ள அ‌ல் கா‌ய்டா ‌தீ‌விரவா‌திகளை‌க் கு‌றிவை‌த்து தா‌க்குத‌ல்க‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டதா‌‌ல், அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளி‌ன் எ‌தி‌ர்‌ப்பை‌த் தா‌க்குத‌ல்க‌ள் மூல‌ம் தெரி‌வி‌த்து வரு‌கி‌ன்றன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்