ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கு 5 நாடுகள் தேர்வு!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (15:32 IST)
ஐ.ா. பாதுகாப்பு பேரவையில் தற்காலிக உறுப்பினரகளாக இடம் பெற்றிருந்த 5 நாடுகளின் பதவிக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அந்த இடத்தை நிரப்ப நேற்று நடைபெற்ற தேர்தலில் பர்கினாபேஷோ, கோஸ்டாரிக்கா, குரோஷியா, லிபியா, வியட்நாம் நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 நாடுகளும் வரும் 2008, ஜனவரி முதல் இரண்டு ஆண்டுகள் ஐ.ா. பாதுகாப்பு பேரவையில் தற்காலிக உறுப்பினர்களாக பணியாற்றும்.

ஐ.ா. பாதுகாப்புக் பேரவை மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை நிரந்தர உறுப்பநாடுகளாகும். எஞ்சியுள்ள 10 இடங்களில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள காங்கோ, கானா, கத்தார், பெரு மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளின் பதவிக் காலம் வரும் டிசம்பர் இறுதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் மீதமிருந்த 5 இடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்தலில் பர்கினாபேஷோ, கோஸ்டாரிக்கா, குரோஷியா, லிபியா, வியட்நாம் ஆகிய நாடுகள் 3ல் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை இறுதியில் பர்க்கினா பேஷோ, லிபியா, வியட்நாம் ஆகிய நாடுகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கோஸ்டா ரீக்கா மற்றும் குரோஷியா ஆகியவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற மூன்று சுற்றுக்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பர்கினாபேஷோ கடந்த 1984-85 ஆண்டுகளிலும், லிபியா 1976-77 ஆம் ஆண்டுகளிலும் கோஸ்டாரீக்கா 1974-75 மற்றும் 1997-98 ஆகிய ஆண்டுகளிலும் பாதுகாப்பு பேரவையில் ஏற்கனவே பணியாற்றியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்