சுற்றுச்சூழல் பாதுகாப்பு : திருப்பதி மலையில் புதிய கட்டடங்களுக்கு தடை

திங்கள், 15 ஜூன் 2009 (15:08 IST)
திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 தங்கும் விடுதிகளை முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று திறந்துவைத்தார். ரூ.44 கோடி செலவில் புதிதாக கட்டப்படவுள்ள விடுதிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதியில் தற்போதுள்ள விடுதிகளில் சுமார் 60 ஆயிரம் பேர் வரை தங்கும் வசதி உள்ளது. திருப்பதி மலையில் புதிது புதிதாக நிறைய கட்டடங்கள் கட்டுவதால் மலையின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மலைகளின் இயற்கை அழகை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்