பெற்றோர்களின் போராட்டமும், அரசின் மவுனமும்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சாரங்கபாணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நிர்வாகம் கேட்கும் பணத்தை செலுத்தும் மாணவர்களையும ், நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களையும் தனித் தனியாக பிரித்து பாடம் நடத்துவதாக கூறி பெற்றோர்களும ், புரட்சிகர மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து கடந்த தி.மு.க. ஆட்சியில் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி புதிய கல்வி கட்டணத்தை அரசு இணையதளத்தில் வெளியிட்டத ு. இந்த கல்விக் கட்டணம் தங்களுக்கு போதாது என்று கூறி 6,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தத ு. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம ், கோவிந்தராஜன் குழ ு, மேல்முறையீடு செய்த பள்ளிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்யும் படி உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது கடந்த தி.மு.க. அரச ு. இந்த குழு மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி முடித்தத ு. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கல்வி கட்டணம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டத ு. இந்த தாமதத்தால் பெற்றோர்கள் ஆங்காங்கே பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த போராட்டத்தின் பயனாக கடந்த 13ஆம் தேதி நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு புதிய கல்வி கட்டணத்தை வெளியிட்டது. ஆனால் எந்தெந்த பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்க தனியார் பள்ளிகள் மறுத்துவிட்டன. இதனால் பெற்றோர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்துதான் கடந்த 17ஆம் தேதி கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட்டது தமிழக அரச ு.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட மேல்முறையீடு செய்த பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர்கள் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்விக் கட்டணத்தை வெளியிட்டதோடு சர ி, எங்கள் வேலை முடிந்துவிட்டத ு. இனி பெற்றோர்கள ், தனியார் பள்ளிகளின் பாடு என்ற நிலையில் இருந்துவிட்டது தமிழக அரசு . பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரே ா, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழியாகத்தான் கூறுகிறாரே தவிர நேரடி நடவடிக்கையில் இதுவரை இறங்கவில்லை. ஒரு சில பெற்றோர்கள், பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்தி விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். வில்லிவாக்கத்தில் உள்ள சாரங்கபாணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல ். கே.ஜி-க்கு 5,750 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது ரவிராஜபாண்டியன் குழுவின் உத்தரவ ு. ஆனால் இந்த கட்டணத்தை வசூலித்தால் எங்களால் பள்ளியை நடத்த முடியாது என்று கூறியுள்ள நிர்வாகம ், அவர்கள் கேட்டும் கட்டணத்தை கொடுக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து வருகிறதாம ். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை கொடுத்தால் நாட்டமில்லாமல் மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இப்படிப்பட்ட பள்ளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்ற பள்ளிகள் திருந்தும ். இல்லாவிட்டால் தினந்தோறும் பெற்றோர்களின் போராட்டம் நடக்கத்தான் செய்யும ். இந்த விடயத்தில் தமிழக அரசு மவுனமாக இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
செயலியில் பார்க்க x