வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.53/42.54 ஆக இருந்தது.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.40 / 42.41.
நேற்று மதியத்தில் இருந்து இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலர்களை வாங்கினார்கள். இத்துடன் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவாலும் டாலரின் மதிப்பு அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 172, நிஃப்டி 46 புள்ளி குறைந்தது. இந்த வருடத்தில் இதுவரை பங்குச் சந்தை குறியீட்டு எண் 21 விழுக்காடு குறைந்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் இதுவரை ரூபாயின் மதிப்பு 7.4 விழுக்காடு குறைந்துள்ளது.
(சென்ற வருடம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் 17.4 பில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12.3 விழுக்காடு உயர்ந்தது)