வெங்காய விலை: விவசாயிகள் சாலை மறியல்!

சனி, 17 மே 2008 (11:26 IST)
வெங்காயத்திற்கு குறைந்த விலை கொடுப்பதை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே ஜோட்ஜ் நகரில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் வெங்காயம் குவி‌ண்டாலுக்கு ரூ.51 கொடுக்கப்படுகிறது. ஆனால் விவசாய விளை பொருட்கள் விற்பனை கழகம் பிம்பில்கான் என்ற நகரில் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் வெங்காயத்திற்கு குவி‌ண்டாலுக்கு ரூ.101 கொடுக்கிறது.

இதே விலை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஜோட்ஜ் சந்தையில் வெங்காயம் விற்பனை செய்யும் விவசாயிகள் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகளவு போக்குவரத்து உள்ள இந்த சாலையில் மறியலால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆவேசத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம், தபாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாதா கோவஸ் மற்றும் அரசு, காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்‌த்தை நடத்தினார்கள். இதற்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்