தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் இருந்தாலும், இந்த அக்சய திருதி வாரத்தில் தங்கத்தின் விற்பனை 55 டன்னையும் தாண்டிவிடும் என்று உலக தங்க கவுன்சிலின் மேலாண்மை இயக்குநர் ( இந்திய தீபகற்பம்) அஜய் மித்ரா தெரிவித்தார்.
webdunia photo
FILE
அக்சய திருதி காலத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற பரவாலன நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
கடந்த சில வருடங்களாக தங்க நகை நகை வியாபாரிகளின் இடைவிடாத முயற்சியினால், அக்சய திருதியில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற கருத்து மக்களிடையே அதிகரித்து உள்ளது.
இந்த வருட அக்சய திருதி தங்க விற்பனை பற்றி அஜய் மித்ரா கூறும் போது, இன்று அக்சய திருதி தொடங்குவதால் மாலை அதிகம் பேர் தங்கம் வாங்க வருவார்கள். இந்த எண்ணிக்கை நாளை அதிகரிக்கும். கடந்த சில வருடங்களாக ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் செய்வதால், அக்சய திருதி அதிக அளவு புகழ் பெற்றுள்ளது. இந்த வருடம் 55 டன் தஙகத்திற்கும் அதிக அளவு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.
முன்பு அக்சய திருதி போன்ற காலங்களில் நகை கடைகளில் நகைகளை வாங்கினார்கள். கடைசி நேர நெருக்கடியை தவிர்கக முன்னதாகவே தங்களிடம் நகை வாங்க ஆர்டர் கொடுக்குமாறு பல நகை கடைகள் சார்பாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்த வாரத்திற்காக நகை கடைகள் புதிய வடிவமைப்பு நகைகளையும் அறிமுகம் செய்கின்றன.
இத்துடன் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் ஆகியன ப்லவேறு அளவுகளில் தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. இவை 1, 2.5, 5, 10, 20, 50 கிராம் அளவுகளில் தங்கம் விற்பனை செய்கின்றன.
webdunia photo
FILE
அக்சய திருதியை முன்னிட்டு இந்தியன் வங்கி நாடுமுழுவதும் உள்ள கிளைகளின் மூலம் ஏற்கனவே 50 கிலோவுக்கும் அதிகமான தங்கம் விற்பனை செய்துள்ளது. இந்த வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளி விபரப்படி சென்ற வருடம் அக்சய திருதி காலத்தில் 200 கிலோ தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
இதே மாதிரி ஐ,ஓ.பி., கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பாங்க ஆப் பரோடா ஆகியவையும் தங்கம் அதிக அளவு விற்பனையாகும் என எதிர்பார்க்கின்றன.
சென்னையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நகைக் கடைகளில் அக்சய திருதியில் மக்கள், குறிப்பாக பெண்கள் ஆவலுடன் நகை வாங்குகின்றனர்.
பல நகை கடைகளில் வைர நகை, தங்க நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக கண்ணை கவரும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
பல கடைகள் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வியாபாரம் நடைபெறும் என அறிவித்துள்ளன.
சென்ற வருடத்தை விட, அதிக அளவு விற்பனையாகும் என்று தங்க நகைகடை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.