டாலர் மதிப்பு 19 பைசா உயர்வு!

புதன், 7 மே 2008 (14:03 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 19 பைசா குறைந்து.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.41.01/ 41.02 என்ற அளவில் இருந்தது. பிறகு வர்த்தகம் ஆரம்பித்தபோது 1 டாலர் ரூ.41.13/41.14 என்ற அளவில் விற்பனையானது.

நேற்றைய இறுதி நிலவரத்தை விட 19 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.40.94 / 40.95.

இன்று சிங்கப்பூர் சந்தையில் ஆசிய தொகுதிக்கான பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 123 டாலராக அதிகரித்தது.

இதனால் பெட்ரோலிய நிறுவனங்களும். இறக்குமதியாளர்களும் அதிக அளவு டாலரை வாங்கியதால் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்