வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா குறைந்து.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.65/ 40.66 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட, 4 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.40.61.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 120 டாலராக நேற்று அதிகரித்தது. பெட்ரோலிய நிறுவனங்களும் சில அந்நிய நாட்டு வங்கிகளும் டாலரை வாங்குதில் ஆர்வம் காண்பித்தன.
அத்துடன் இன்று பங்கு சந்தைகளும் இறங்குமுகமாக இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் இந்தியாவின் அந்நிய நாடுகளுடான வர்த்தகத்தில் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிக அளவு அதிகரித்துள்ளதும் இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.40.65 முதல் ரூ.40.72 என்ற அளவில் இருந்தது. கடந்த எட்டு மாதங்களில் இன்று தான் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறைந்துள்ளது. மேலும் ரூபாயின் மதிப்பு 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.40.84 என்ற அளவிற்கு குறையலாம் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.