வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சிறிது குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.40.13 முதல் ரூ.40.14 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.40.12/40.13.
பெட்ரோலிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கு பணம் வழங்குவதற்காக கடந்த சில நாட்களாக டாலரை வங்கினார்கள். இவை இன்று பிற்பகலில் டாலர் வாங்ககலாம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கும் போது, ரூபாய் மதிப்பில் மாற்றம் இருக்கலாம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இது வரை இல்லாத அளவு சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 120 டாலராக அதிகரித்தது.
ரிசர்வ் வங்கி நாளை காலாண்டிற்கான கடன் கொள்கை அறிவிக்க போகின்றது, இதனால் வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் டாலரை வாங்குகவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.