டாலர் மதிப்‌பி‌ல் மாற்றமில்லை

புதன், 9 ஏப்ரல் 2008 (12:31 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.


இன்று காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் மதிப்பு ரூ.40.03/40.04 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.40.02/40.03.


இன்று அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் குறைந்த அளவிலேயே இருந்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதாலும், ஆசிய பங்குச் சந்தையில் பங்கு விலைகள் குறைந்து இருப்பதால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் 2 முதல் 3 பைசா வரை குறைய வாய்ப்பு உள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் பண்டக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 108 டாலராக அதிகரித்தது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய வர்த்தகத்தில், ஏற்றுமதியை விட, இறக்குமதியின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் அந்நியச் செலவாணி தேவையும் அதிகரிக்கும். இது டாலரின் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்