வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.00 /40.02 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ.40.02/40.03
ரிசர்வ் வங்கியின் கணிப்பிற்கும் அதிகமாக பணவீக்கம் இருப்பதும், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்குவதும் தான் அந்நியச் செலவாணி சந்தையில் அதிக மாற்றம் இல்லாதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வதை ரிசர்வ் வங்கி தடுக்கின்றது. டாலரின் மதிப்பு ரூ.40 என்ற நிலையில் இருப்பதையே ரிசர்வ் வங்கி விரும்புவதாகவும் தெரிவித்தனர்.