ரூபாய் மதிப்பு உயர்வு!

திங்கள், 31 மார்ச் 2008 (11:51 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.86/39.87 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 39.89/39.90

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் சரிந்து வருகின்றன. இதனால் அந்நிய செலாவணி சந்தையில் டாலரின் தேவை அதிகரித்து.

அத்துடன் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதை கட்டுப்படுத்தாமல், அனுமதிக்கும் என்ற தகவல் அந்நியச் செலாவணி சந்தையில் நிலவியது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அதிக அளவு அந்நியச் செலாவணி சந்தையில், இன்று ரூபாயின் மதிப்பு அதிக அளவு அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்