டாலர் மதிப்பு 4 பைசா உயர்வு!

புதன், 26 மார்ச் 2008 (13:24 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.15/40.16 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 4 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 40.11/40.12.

கடந்த நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்தது. இன்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்ததால், முதன் முறையாக ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.

கடந்த மூன்று நாட்களாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிகளவு இருந்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்