உருக்கு, இரும்பு விலையில் அரசு தலையிடாது என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மும்பையில் நேற்று தெரிவித்தார்.
மும்பை வந்துள்ள ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில், உருக்கு மற்றம் இரும்பு விலைகள் எவ்வித காரணமும் இன்றி, கட்டுப்படியாகாத அளவிற்கு அதிகரித்தால் மட்டுமே உருக்கு அமைச்சகம் தலையிடும்.
எனது அமைச்சகத்தில் உருக்கு, இரும்பு விலை உட்பட எல்லா விசயங்களையும் கண்காணிப்பதற்கு ஏற்கனவே குழு உள்ளது.
உள்நாட்டு தேவைகள் முதலில் நிறை வேற்றப்பட வேண்டும். இதனால் உருக்கு ஏற்றுதியை குறைக்க, ஏற்றுமதிக்கு வரி விதிக்கும் யோசனை உள்ளது என்று தெரிவித்தார்.