டாலர் மதிப்பு 10 பைசா சரிவு!

புதன், 5 மார்ச் 2008 (13:03 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்நிய ரூபாய் மதிப்பு 10 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.21/40.22 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை விலையை விட 10 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.33/40.35.

கடந்த இரண்டு நாட்களாக ஏற்றுமதியாளர்கள் கணிசமான அளவு டாலரை விற்பனை செய்த வருகின்றனர். சர்வதேச அந்நியச் செலவாணி சந்தையில் யூரோ,யென் போன்ற மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் ஏற்றுமதியாளர்கள் டாலரை இருப்பு வைத்துக் கொள்ள தயங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்