அமெரிக்காவின் பின்னடைவு : இந்தியாவிற்கு வாய்ப்பு!

Webdunia

செவ்வாய், 4 டிசம்பர் 2007 (14:11 IST)
அமெரிக்க பொருளாதார பின்னடைவு இந்தியாவிற்கு புதிய வாய்ப்புகளை உண்டாக்க இருக்கின்றது.

உலகப் பொருளாதார நிறுவனமும், இந்திய தொழிலக கூட்டமைப்பும் இணைந்து ஞாயிற்றுக் கிழமை டில்லியில் ‘அதிகார பரவல் : இந்தியாவின் நில’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.

இதில் பேசிய பலரும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வது, இந்தியாவிற்கு நன்மை அளிப்பதாக இருக்கின்றது. இதனால் இந்திய நிறுவனங்கள் அந்நிய நாடுகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொருளாதார வளர்ச்சி, சரிவு மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு அமெரிக்கா விதிவிலக்கல்ல. அதன் பொருளாதார பின்னடைவால், மற்ற நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க பங்குச் சந்தையின் பிரதிபலிப்பு ஆசிய பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது என்று மிகைப்படுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதாரத்தின் பலத்திலேயே மற்றவைகளும் இயங்கும் என்று கூறினர்.

இதில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மகேந்திரா அண்ட் மகேந்திரா துணை தலைவர் ஆனந்த் மகேந்திரா, மார்கன் ஸ்டான்லி ஆசிய பிராந்திய தலைவர் ஸ்டீபன். எஸ்.ரோஜ், அமெரிக்க மக்களவை உறுப்பினர் ராபர்ட் எப். பென்னட், அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைஸ் நிறுவன தலைவர் ஹெக்டர் டி.ஜே. ரியூஜ் ஆகியோர் உட்பட பல தொழிலதிபர்கள், நிதி நிறுவன உ.யர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்