பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், " பிர்லா சன் லைப் இன்டர்நேஷனல் ஈக்விட்டி பண்ட் " என்ற திட்டத்தின் கீழ் ரூ. 1,300 கோடி திரட்டியுள்ளது.
இந்த மியூச்சவல் பண்ட் இரண்டு விதமான திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது. 1. இதில் செலுத்தும் தொகையை முழுவதும் மற்ற நாடுகளின் பங்குச் சந்தையில் பதிவு செய்ய்பபட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்வது.
2. இதில் செலுத்தும் தொகையை 65 முதல் 75 விழுக்காடு வரை உள்நாட்டு பங்குகளில் முதலீடு செய்வது. 25 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை மறற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது ஆகிய இரண்டு திட்டங்களில் வெளியிடப்பட்டது.
இந்த நிதி திரட்டல் பற்றி ஆதித்யா பிர்லா குழுமத்தின் நிதி நிர்வாக இயக்குநர் அஜய் சீனிவாசன் கூறுகையில், இது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், ஒரே திட்டத்தின் கீழ் இது வரை திரட்டியுள்ள அதிக பட்ச முதலீடாகும். எங்கள் நிறுவனம் இது வரை வெளியிட்டுள்ள திட்டங்களின் கீழ் ரூ.30 ஆயிரம் கோடி திரட்டி உள்ளது. இதை லாபகரமாக நிர்வகிப்பதால் தான், இப்போது ஒரே திட்டத்தின் கீழ் அதிகளவு முதலீடு திரட்ட முடிந்தது.
இந்த பிர்லா சன் லைஃப் இன்டர்நேஷனல் ஈக்விட்டி பண்ட் என்ற திட்டம் சர்வதேச அளவில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்காக வெளியிடப்பட்டது என்று சீனிவாசன் தெரிவித்தார்.