ஐரோப்பிய சந்தையில் இந்திய மிளகாய்க்கு வாய்ப்பு!

திங்கள், 22 அக்டோபர் 2007 (19:39 IST)
ஐரோப்பிய நாடுகளுக்கு மிளகாய், மிளகு ஏற்றுமதி செய்வதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்தகு இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் மிளகாயை ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்த வருடம் பாகிஸ்தான் மிளகாயில் பூஞ்சான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானில் இருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளன.

இதே போல் பாகிஸ்தானில் இருந்து மிளகாய் தூளை இறக்குமதி செய்து வரும் ஜப்பானும், மிளகாய் தூளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

இங்கு பூஞ்சை தாக்குதல் இல்லாமல் உற்பத்தியும் குறைந்து விட்டது. இதற்கு காரணம் அதிகளவு மிளகாய் உற்பத்தியாகும் சிந்து மாகாணத்தில், குறிப்பாக தர்பார்கர் பகுதியில் அதிகளவு மழை பெய்த காரணத்தினால் மிளகாய் விளைச்சல் குறைந்து விட்டது.

சென்ற வருடம் 1 லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து 900 டன் உற்பத்தியானது. இந்த வருடம் 61 ஆயிரத்து 900 டன்னாக குறைந்து விட்டது.

மிளகாய் மட்டுமல்லாமல் மிளகு உற்பத்தியும் குறையும் என மதிப்பிடப்படுள்ளது. மிளகு பயிர் செய்யும் பகுதிகளிலும் அதிகளவு மழை பெய்த காரணத்தினால் மிளகு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐரோப்பிய சந்தைகளில் இந்திய மிளகாய்க்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மிளகாய்., மிளகு ஏற்றுமதி செய்வதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



















வெப்துனியாவைப் படிக்கவும்