பங்குச் சந்தையில் ஏற்றத்திற்குப் பின் இறக்கம்!

Webdunia

வெள்ளி, 22 ஜூன் 2007 (13:47 IST)
இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 4 நாட்களாக வணிகத்தின் துவக்கத்திலேயே ஏற்பட்ட ஏற்றம் இன்று லேசாக ஏற்பட்டு பிறகு நேற்றைய வணிகத்தின் முடிவில் இருந்த நிலையை விட சற்றே குறைந்துள்ளது!

பங்குகள் வர்த்தகத்தில் தொடர்ந்து இருந்த ஏற்றத்தின் காரணமாக பங்குகள் விற்பனை அதிகரித்ததையடுத்து, இன்று காலை வர்த்தகத்தில் 28 புள்ளிகள் உயர்ந்து 14,500 புள்ளிகளைத் தாண்டிய பங்குச் சந்தை குறியீடு தற்பொழுது 30 புள்ளிகள் குறைந்து 14,469 ஆக உள்ளது.

தேச பங்குச் சந்தை குறியீடு 18 புள்ளிகள் குறைந்து 4,249 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தை வணிகம் ரூ.537 கோடியாக உள்ளது. இந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் சற்றேறக்குறைய 990 பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. 570 பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டை நிர்ணயிக்கும் 30 முதன்மைப் பங்குகளில் 14 ஏற்றத்தையும், 16 சரிவையும் சந்தித்துள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வெளியிட்ட பொது பங்கு பத்திரம் அதன் நிர்ணய விலையை விட 5.18 பங்கு அதிகமாக இருக்கிறது.

ரிலையன்ஸ் எனர்ஜி, என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ. ஆகியன ஏற்றத்திலும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாட்டார் மோட்டார்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏ.சி.சி. ஆகியன இறக்கத்திலும் உள்ளன. இது நண்பகல் 12 மணி நிலவரம். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்