குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதங்களை இந்திய மைய வங்கி (ஆர் பி ஐ) உயர்த்தியதையடுத்து, காலவரை வைப்பு (Term Deposits) நிதிகள் மீதான வட்டி விகிதங்களை இலக்ஷ்மி விலாஸ் வங்கி உயர்த்தியுள்ளது.
181 முதல் 270 நாட்கள் வரையிலான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
271 முதல் 364 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் 6.25 விழுக்காட்டிலிருந்து 6.50 விழுக்காடாகவும், ஓராண்டு முதல் ஈராண்டுக்குட்பட்ட வைப்பு நிதி மீதான வட்டி 7.25இல் இருந்து 7.50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதெனவும், இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் இலக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.