மிளகு-சீரகம் விலை குறைந்தது
திங்கள், 12 ஏப்ரல் 2010 (16:37 IST)
மிளகு, சீரகம் விலை இன்று குறைந்தது.
டெல்லி மொத்த மளிகை பொருட்கள் சந்தையில் இன்று மிளகு, சீரகம் விலை குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்தது.
முன்பேர சந்தையில் விலை அதிக அளவு உயராதது, ஏற்றுமதியாளர்கள் குறைந்த அளவே வாங்கியதால் விலை குறைந்தது.
மிளகு விலை ரூ.100 குறைந்து குவின்டால் ரூ.15,300 முதல் ரூ.15,400 ஆக முடிவுற்றது.
முதல் ரக சீரகமத்தின் விலை ரூ.100 குறைந்து குவின்டால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13,500 என முடிவுற்றது.
சாதாரண ரக சீரகத்தின் விலையும் குவின்டாலுக்கு ரூ.100 குறைந்து, குவின்டால் ரூ.11,400 முதல் ரூ.11,800 ஆக முடிவுற்றது.
பாக்கு விலை கிலோ ரூ.85-115., ஏலக்காய் ஜுன்டிவாலி ரகம் கிலோ ரூ.465-ரூ.470, கான்சிகட் ரகம் கிலோ ரூ.500-ரூ.535 ஆக முடிவுற்றது.