ரிலையன்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ்: புதிய காப்பீடு திட்டம்

திங்கள், 11 ஜனவரி 2010 (10:09 IST)
ரிலையன்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிதாக 17 காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாய் கோஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், பங்குச் சந்தை முதலீடு வாயிலாக அதிக இலாபத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த யூலிப் திட்டங்களில் இரண்டு வகையான காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 15 வருட காப்பீடு, அத்துடன் சேமிப்பு. மற்றவை 10 வருட காப்பீடு, குழந்தைகள் கல்வி, ஓய்வுகால சேமிப்பு திட்டமாகும்.

காப்பீடு செய்து கொள்பவர்கள் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை பிரிமியம் செலுத்தும் வகையில் யூலிப் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.


யூனிட் லிங்கிடு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற காப்பீடு திட்டம் சுருக்காமாக யூலிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டங்களில், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், நிதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.


வெப்துனியாவைப் படிக்கவும்