ஏ.சக்திவேலுக்கு பத்மஸ்ரீ விருது

புதன், 28 ஜனவரி 2009 (11:36 IST)
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேலுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது ஜவுளித்துறைக்கு கிடைத்த கௌரவம் என்று திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா) தெரிவித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல், ஜவுளித் துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரை பாராட்டி டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1990 முதல் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவராக பதவி வகித்துவரும் ஏ.சக்திவேல் ஜவுளித் துறைக்கு பெரும் சேவை புரிந்துள்ளார். ஏ.சக்திவேலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க தேர்வு செய்திருப்பதன் மூலம் ஒட்டு மொத்த ஜவுளித்துறைக்கும் மத்திய அரசு மாபெரும் கௌரம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

முன்னாக திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கத் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் எம்.சிவசுப்பிரமணியம், இணைச் செயலர்கள் ஏஇதயத்துல்லா, கே.எம்.விக்டர் உள்ளிட்டோர் ஏ.சக்திவேலை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்