தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகத் திட்டங்களுக்கு அனுமதி

வெள்ளி, 23 ஜனவரி 2009 (12:02 IST)
தூத்துக்குடி துறைமுகத்தில் 8-வது தளத்தை சரக்கு முனையமாக மேம்படுத்துவதற்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.312.23 கோடி செலவில் உருவாக்கி, இயக்கி, ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படும்.

இதே போல் எண்ணூர் துறைமுகத்தில் ரூ.1,407 கோடி செலவில் சரக்கு முனையம் அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் உருவாக்கி, இயக்கி, ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த இரு திட்டங்களுடன் மர்ம கோவா துறைமுகத்தில் நிலக்கரி முனையம் அமைப்பதற்கான ரூ.334 கோடி செலவிலான திட்டத்திற்கும் இம்மூன்று திட்டங்களும் மத்திய கப்பல் போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்படும்.
இந்த அனுமதிகளை பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர் அண்மையில் புது தில்லியில் நடந்த இத்துறையின் கூட்டத்தில் அனுமதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்