மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன.
அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தையில், சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் குறைந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 353.81, (3.81%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,937.20 ஆக சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 116.40 (4.16%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2683.15 ஆக குறைந்தது.
மிட் கேப் 2.33 (2.33%), சுமால் கேப் 102.73 (2.81%), பி.எஸ்.இ 500- 118.06 (3.44%) புள்ளிகள் குறைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 3.60%, வங்கி 4.51%, உலோக உற்பத்தி 4.38% , நுகர்வோர் பொருட்கள் 3.52%, மின் உற்பத்தி 4.67%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.53%, பொதுத்துறை நிறுவனங்கள் 4.42%, வாகன உற்பத்தி 2.88%, தொழில் நுட்பம் 4.96%, தகவல் தொழில் நுட்பம் 4.70% குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 661 பங்குகளின் விலை அதிகரித்தது. 1831 பங்குகளின் விலை குறைந்தது. 75 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 46 பங்குகளின் விலை குறைந்தது.
ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.
சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.
வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 1 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.
மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 9 பங்குகளின் விலை உயர்ந்தது. 40 பங்குகளின் விலை குறைந்தது.