நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

சனி, 8 நவம்பர் 2008 (09:44 IST)
புது டெல்லி: இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நேரடி வரி வசூல் ரூ.1,66,905 கோடி எட்டியுள்ளது.

வருமான வரி, ஏற்றுமதி-இறக்குமதி வரி போன்ற நேரடியாக, வரி செலுத்துவது நேரடி வரிகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 1,66,905 கோடி கிடைத்துள்ளது.

இது நிதி ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது,. 29.52 விழுக்காடு அதிகமாகும். (சென்ற நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோப்ர வரை வசூல் ரூ.1,28,864 கோடி)

இதில் கார்ப்பரேட் டாக்ஸ் எனப்படும் நிறுவன வரி ரூ. 1,05,174 கோடி வசூலாகியுள்ளது. (சென்ற ஆண்டை விட 33.49% அதிகம்)

தனிநபர் வருமான வரியாக ரூ.61,433 கோடி வசூலாகியுள்ளது (சென்ற ஆண்டு விட 23.14% அதிகம்)
.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் நேரடி வரியினால் கிடக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் குறையாமல், இதனை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நேரடி வரிகளுக்கான வாரியம் தெரிவித்துள்ளது.

வரி வசூலிப்பதில் செய்யப்பட்டுள்ள உத்தியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சம்பளத்தில் வருமான வரியை பிடித்தம் செய்தல் போன்ற முறைகளை பின்பற்றியாதால், நேரடி வரி வசூல் 35.78% அதிகரித்துள்ளது. இந்த முறை மூலம் நிறுவனங்களில் பிடிக்கப்படும் வரி 48.2% கூடியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்