மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளின் வராக் கடன்கள் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 24.36 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளில் உள்ள நமது மக்களின் வைப்பு நிதிகள் பாதுகாப்பாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்திருந்தாலும், வங்கிகளின் நிதி நிலை பலவீனப்பட்டுள்ளது என்றும் அசோசம் அறிக்கை கூறியுள்ளது.
பொதுத் துறை வங்கிகள் அளித்த காலாண்டு அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ள அசோசம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.15,463 கோடியாக இருந்த வராக் கடன்கள், இந்த ஆண்டின் காலாண்டில் ரூ.17,523 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.
இதேபோல பொதுத் துறை வங்கிகளின் முதலீடு வர்த்தக விகிதாச்சாரம் (Capital Adequacy Ratio - CAR) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 13.41 விழுக்காடாக இருந்தது, இந்த ஆண்டின் காலாண்டில் 12.68 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் அசோசம் அறிக்கை கூறியுள்ளது.