கெயில் (GAIL) நிறுவனம் தற்போது இரண்டு பங்கு வைத்திருப்பவர்களுக்கு 1 பங்கு போனஸ் பங்காக (bonus Share) வழங்க தீர்மானித்துள்ளது.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மேலான்மை இயக்குநருமான யு.டி.செளபே (Choubey) கூறுகையில், தற்போது 1:2 என்ற விகிதாச்சாரத்தில் போனஸ் பங்குகள் வழங்க உள்ளோம். இதனால் இந்நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ.2,000 கோடியாக அதிகரிக்கும்.
தற்போது படா பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் வருடத்திற்கு 4 லட்சம் டன்னாக உள்ளது. இது அடுத்த வருடத்தில் 5 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். இங்கு பாலிமரும் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்தவுடன், பங்குச் சந்தைகளில் இதன் பங்கு விலை உயர்ந்தது. நேற்று 1 பங்கு விலை ரூ.405.55 ஆக இருந்தது. இன்று காலை ரூ.416 ஆக உயர்ந்தது.