கனரா வங்கி வீட்டுக் கடன் வட்டி குறைப்பு!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (19:29 IST)
கனரா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை அரை சதவிதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு, எல்லாவித புதிய வீட்டுக் கடனுக்கும் பொருந்தும்.

புதிய வட்டி விகிதம் அக்டோபர் 4 ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, 5 வருடங்களில் திருப்பிச் செலுத்தக்கூடிய ரூ.20 இலட்சம் வரையிலான கடனுக்கு 10.25 விழுக்காடு வட்டி விதிக்கப்படும். 5 வருடத்தில் இருந்து 10 வருடம் வரை திருப்பி செலுத்தும் கடனுக்கு 10.50 விழுக்காடு வட்டி விதிக்கப்படும். 10 வருடம் முதல் 20 வருடம் வரையிலான கடனுக்கு 10.75 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.

ூ.20 இலட்சத்துக்கும் அதிகமான 5 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் கடனுக்கு 10.50 விழுக்காடும், 5 வருடத்தில் இருந்து 10 வருடத்தில் திருப்பிச் செலுத்தும் கடனுக்கு 10.75 விழுக்காடும், 10 வருடம் முதல் 20 வருடம் வரை திருப்பிச் செலுத்துவதற்கு 11 விழுக்காடு வட்டி விதிக்கப்படும்.

வீட்டுக் கடன் வழங்குவதற்கு வசூலிக்கப்படும் பிராசஸிங் கட்டணமும் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என கனரா வங்கி அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்