பணவீக்கம் 4.36 விழுக்காடாக குறைந்தது!

Webdunia

ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (20:38 IST)
உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் பணவீக்க விகிதம் ஜூலை 21 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.36 விழுக்காடாக குறைந்துள்ளது!

இந்திய மைய வங்கி அறிவித்த காலாண்டு நாணயக் கொள்கை அறிக்கையும், பணப்புழக்கம் குறைக்கப்பட்டதாலும் ஒரு வார காலத்தில் 0.05 விழுக்காடு பணவீக்கம் குறைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முட்டை 6 விழுக்காடு, ஆட்டுக்கறி 4 விழுக்காடு, கடல் மீன் 3 விழுக்காடு, பருப்பு, மக்காச்சோளம், வாசனைப் பொருட்கள், மசாலா, கடலை ஆகியன ஒரு விழுக்காடும் விலை குறைந்துள்ளன.

பழங்கள், காய்கறிகள், க·பி, பன்றி இறைச்சி ஆகியவற்றின் ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான குறியீடு 222.8 புள்ளிகளில் இருந்து 222.5 புள்ளிகளாக குறைந்துள்ளன. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்