சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

திங்கள், 22 ஆகஸ்ட் 2011 (16:53 IST)
மும்பைப் பங்குச் சந்தை கடந்த வார சரிவுநிலைக்குப் பிறகு இன்று மீண்டும் உயர்ந்தது. இன்று சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் அதிகரித்து முடிவில் 16,341.70 புள்ளிகளாக உள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 53.15 புள்ளிகள் அதிகரித்து 4,898.80 புள்ளிகளாக நிறைவுற்றது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி. பங்குகள் 3%க்கும் மேல் உயர்வு கண்டன.

வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப்பங்குகள் சரிவைச் சந்தித்தன. மற்ற 11 துறைகளைச் சார்ந்த பங்குக் குறியீடுகள் உயர்ந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்