மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், கடந்த பத்து வாரங்களாக இல்லாத அளவு வெள்ளியின் விலை அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.245 உயர்ந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.28,085 ஆக அதிகரித்தது. இதே போல் தங்கத்தின் விலையும் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு அதிகரித்தது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190 உயர்ந்து, 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.16,730 ஆக உயர்ந்தது. மற்ற நாட்டு சந்தைகளிலும இரண்டின் விலையும் அதிகரித்தன. அந்நிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,147.00/1,147.02 டாலராக அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை அவுன்ஸ் 18.15/18.17 டாலராக உயர்ந்தது. இன்று காலை விலை விபரம்
பார் வெள்ளி கிலோ ரூ.28,085 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,730 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,815.