மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சில நிமிடங்களிலேயே குறைந்தன. ஆனால் பிறகு அதிகரிக்க துவங்கியது. இன்று நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. .
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 63.58 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,647.47 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.60 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,934.50 ஆக உயர்ந்தது.
அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.30, சுமால் கேப் 9.81, பி.எஸ்.இ 500- 23.76 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் யூனிடெக் பங்கு விலை 9.64 %, ஜு என்டர்டயன்மென்ட் 9.63%, டி.எல்.எப் 9.04%, ரிலையன்ஸ் கேப்பிடல் 5.39%, பி.ஹெச்.இ.எல் 4.41%, எல் அண்ட் டி 3.58%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3.16%, கெயில் 3.05%, ஹெச்.டி.எப்.சி வங்கி 3.00%, சன் பார்மா 2.81% அதிகரித்தன.
செயில் பங்கு விலை 3.89%, ரிலையன்ஸ் இன்ப்ராக்சர் 2.52%, டாடா மோட்டார்ஸ் 2.40%, ஹின்டால்கோ 2.18%, ஹெச்.இ.எல் டெக் 1.92%, ஏ.பி.பி 1.81%, ஐ.டி.சி 1.53%, என்.டி.பி.சி 1.45%, டாடா ஸ்டீல் 1.40%, ரிலையன்ஸ் பெட்ரோலியம் 1.19% குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1387 பங்குகளின் விலை அதிகரித்தது. 1080 பங்குகளின் விலை குறைந்தது. 109 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.