பங்குச் சந்தை சரிவு

புதன், 17 டிசம்பர் 2008 (10:56 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்து நிமிடத்திலேயே குறைய துவங்கின.

காலை 10.19 மணியளவில் சென்செக்ஸ் 26.81, நிஃப்டி 1.70 புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 359.61, எஸ் அண்ட் பி 500-44.61, நாஸ்டாக் 81.55 புள்ளிகள் அதிகரித்தன.

அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை 1 விழுக்காட்டில் இருந்து கால் விழுக்காடாக குறைத்துள்ளது. அந்த நாட்டு நிதி நெருக்கடியை தீர்க்க எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வட்டியை குறைத்துள்ளது. இதனால் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் சாதகமான நிலை நிலவியது.

இதே போல் இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

அதே நேரத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக் கூட்டம் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதில் கச்சா எண்ணெய் விலை சரிவை கட்டுப்படுத்தும் வகையில் உற்பத்தி குறைப்பு பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் நேற்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 44 டாலராக அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-31.52 புள்ளிகள் அதிகரித்தன.

காலை 10.35 மணியளவில் நிஃப்டி 43.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,998.75 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 140.52 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,836.46 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 12.96, பி.எஸ்.இ. 500- 37.00 புள்ளிகள் குறைந்தது. அதே நேரத்தில் சுமால் கேப் 54.20 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தையில் காலையில் சரிவை சந்தித்தாலும், நண்பகலில் மாற்றம் அடைய வாய்ப்பு உண்டு.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான், தென்கொரியா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 140.72, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 14.51, சீனாவின் சாங்காய் காம்போசிட் 24.92 புள்ளிகள் அதிகரித்தன.

ஜப்பானின் நிக்கி 52.43 தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 6.45 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.33 மணியளவில் 942 பங்குகளின் விலை அதிகரித்தும், 723 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 42 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.6.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.39.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்