பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. 10.12 மணியளவில் சென்செக்ஸ் 122.83, நிஃப்டி 38.30 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
ஆசிய நாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம், இந்திய பங்குச் சந்தையிலும் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 242.85, எஸ் அண்ட் பி 500-21.03, நாஸ்டாக் 24.40 புள்ளிகள் குறைந்தன.
ஐரோப்பிய நாடுகளில் நேற்று பெல்ஜியம் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-81.20 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.41 மணியளவில் நிஃப்டி 60.75 புள்ளிகள் அதிகரித்து குறீயீட்டு எண் 2,844.75 ஆக அதிகரித்தது. இதே போல் சென்செக்ஸ் 163.96 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,328.58 ஆக உயர்ந்தன.
மிட் கேப் 18.69, சுமால் கேப் 18.13, பி.எஸ்.இ. 500- 51.85 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று சீனா தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தன.
ஜப்பானின் நிக்கி 244.07, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 46.82, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 24.17, ஹாங்காங்கின் ஹாங்செங் 525.45 புள்ளிகள் அதிகரித்தன. சீனாவின் சாங்காய் காம்போசிட் 23.70 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.39 மணியளவில் 961 பங்குகளின் விலை அதிகரித்தும், 68 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 68 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 350.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.617.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.