ரூபாய் மதிப்பு சரிவு

திங்கள், 1 டிசம்பர் 2008 (11:07 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலவாணி சந்தையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்கியதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று 1 டாலர் ரூ.50.17 பைசா என்ற அளவில் விற்பனையானது.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.50.07 பைசா.

கடந்த வெள்ளிக் கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்